
திருச்சி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால் சிசு உயிரிழந்ததாக கூறி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீநிதி (26) என்ற கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, அப்போது பணியில் இருந்த செவிலியர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து பிரசவத்தின் போது சிசு உயிரிழந்தது. ஆனால், சிசு இறந்தது குறித்து 3 மணி நேரமாகியும் செவிலியர் உறவினர்களிடம் கூறாமல் இழுத்தடித்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in