தொலைதூர கல்வியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

தொலைதூர கல்வியில் சேருவதற்கு இன்று (2-ம் தேதி) முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக் கழகத்தின் தொலை தூர கல்வி நிறுவனத்தில் 2023 – 2024-ம் ஆண்டிற்கான யு.ஜி.சியால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (ஜன. 2-ம் தேதி) முதல் வழங்கப்படும்.

மாணவர்கள், நேரிலோ அல்லது http://online.ideunom.ac.in என்ற இணையதளத்திலோ சென்று முழுமையான விவரங்களி தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.