பாஜக மூத்த தலைவர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி இன்று காலை உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் காலமானார். அவருக்கு வயது 88.

கேசரிநாத் திரிபாதி கடந்த டிசம்பர் மாதம் கை முறிவு மற்றும் மூச்சுத் திணறலுடன் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் ஐசியூக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரிபாதி சமீபத்தில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் இன்று அதிகாலை காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திரிபாதி ஏற்கனவே இரண்டு முறை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அலகாபாத்தில் நவம்பர் 10, 1934-ல் பிறந்த கேசரி நாத் திரிபாதி, பீகார், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக குறுகிய காலத்திற்கு கூடுதல் பொறுப்பைக் கொண்டிருந்தார். ஆறு முறை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

1977 முதல் 1979 வரை ஜனதா கட்சி ஆட்சியின் போது உத்தரபிரதேசத்தில் நிறுவன நிதி மற்றும் விற்பனை வரி கேபினட் அமைச்சராக இருந்தார். அத்துடன், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

எழுத்தாளர் மற்றும் கவிஞரான கேசரிநாத் திரிபாதி பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது முக்கிய இலக்கியப் படைப்புகள் ‘மனோனுகிருதி’ மற்றும் ‘ஆயு பங்க்’ எனப்படும் இரண்டு தொகுப்புகளாகும். இவரது ‘சஞ்சயிதா: கேசரி நாத் திரிபாதி’ என்ற நூல் பல பாராட்டுகளைப் பெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.