பெரும் சோகம்.. ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து.. மூன்று வீரர்கள் உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில், மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இளநிலை அதிகாரி உட்பட 3 ராணுவ வீரர்கள் நேற்று (ஜன.10-ம் தேதி) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் பனி மூடிய பாதையில் சறுக்கி, ஆழமான பள்ளத்தில் விழுந்தது.

இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகிய 3 பேரும் இறந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மாச்சல் பகுதியில் கடும் பனி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.