
மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதை குற்றமாக அறிவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமண பாலியல் வல்லுறவைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினர்.
என்றாலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை அறியவேண்டிய பல்வேறு சட்ட கேள்விகளைக் கெண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்திருந்தனர்.

‘அரசியலமைப்புக்கு எதிரானது என்பதற்காக, இந்திய தண்டனைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 162 ஆண்டுகள் கழிந்த பின்னரும் திருமணமான ஒரு பெண்ணின் நீதிக்கான குரலுக்கு செவி சாயக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் உள்ள இந்த விதிவிலக்கு அரசியல் அமைப்பு எதிரானது இல்லை, கொஞ்சம் தெளிவாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது’ என்று நீதிபதி ஷக்தேக் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான குஷ்பூ சைஃபி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பான மனுக்களுக்கு மத்திய அரசு வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை மார்ச் 21ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
newstm.in