துருக்கி நிலநடுக்கத்தில் இடுபாடுகளில் சிக்கி பிரபல கால்பந்து வீரர் அகமத் ஐயூப் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி – சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. 1500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர நிகழ்வால் துருக்கியில் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். துருக்கி -சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும், 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் பேரிடர் குழுக்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்நிலையில், இந்த கோர நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாவுசலி என்ற பகுதியில் பிறந்த அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான் (28) துருக்கி கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்தார். யெனி மடால்யஸ்போர் என்ற கிளப்பின் பிரதான கோல் கீப்பராக விளையாடி வந்தார். இவர் வீட்டில் மனைவியுடன் இருந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
newstm.in