செவிலியர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரபல நடிகர் பாலகிருஷ்ணா அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தெலங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் பாலகிருஷ்ணாவும் ஒருவர். இவர் தனது சூப்பர் மேன் சக்திகளால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக அறியப்படுபவர். பாலகிருஷ்ணாவின் சண்டைக் காட்சிகள் தவறாமல் மீம்ஸ்களில் இடம்பிடித்துவிடும்.
அதே போல் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து அடிக்கடி மாட்டிக் கொள்பவர் பாலகிருஷ்ணா. ஒருமுறை, ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்று கேட்டு, பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் வச்சி செய்தது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் தற்போது வேறு ஒரு சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒருமுறை காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றபோது தனக்கு காயம் ஒன்றும் இல்லை சிகிச்சை வேண்டாம் என்று சொன்னராம்.
ஆனால் அங்கிருந்த அழகான செவிலியர்களை பார்த்த பிறகு தாமாக முன்வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றுக் கொண்டதாக பேசினார். அவர் இப்படி பேசியது இணையத்தில் வைரலானது.
செவிலியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்நிலையில் தனது பேச்சுக்கு பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டுள்ளார். தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனாலும், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
newstm.in