மாநிலங்களவையில் அமளியை தனது செல்போனில் படம் பிடித்த பெண் எம்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதானி விவகாரம், பிபிசி ஆவணப்படம் ஆகியவை இந்த முறை இரண்டு அவைகளிலும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. எதிர்க்கட்சிகளை ஆளும் பாஜகவை சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்துக்கு பதில் அளித்தபோது கடும் அமளி ஏற்பட்டது. பிரதமர் பேசும் போதே எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது அமளியை சபையில் இருந்த மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி ரஜனி அசோக் ராவ் பாடீல் படம் பிடித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்தை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டார்.
அதன்பின்னர் ரஜனி அசோக்ராவ் பாடீலை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனால் அவரை எஞ்சிய கூட்டம் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
newstm.in