டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது. முதல் இன்னிங்சில் அஷ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அந்த வகையில் அஷ்வின் இந்த டெஸ்டில் 31ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்பு இதே சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே நிகழ்த்தியுள்ளார். தற்போது அந்த சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா 11ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை இந்த போட்டியில் கைப்பற்றியுள்ளார். உலக அளவில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 45 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்.
2ஆவது டெஸ்ட் வரும் 17ஆம்தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால், அடுத்த டெஸ்டில் ஆடும் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று கருதப்படுகிறது.
நெவ்ஸ்டம்.in