மத்திய பிரதேசத்தின் சிங்ராவ்லி மாவட்டத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளி செல்கின்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 3 கி.மீ. தொலைவுக்கு வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு தந்தையை இந்த வண்டியில் வைத்து தள்ளி சென்றுள்ளான்.
மறுமுனையில் சிறுவனின் தாய் வண்டியை முன்னே இழுத்து செல்கிறார். ஆம்புலன்சுக்காக சிறுவனின் குடும்பத்தினர் 20 நிமிடங்கள் வரை காத்திருந்து உள்ளனர். ஆனால், ஆம்புலன்சு வரவில்லை. இதனால், காலதாமதம் செய்ய வேண்டாம் என்பதற்காக தள்ளு வண்டி ஒன்றில் வைத்து, தந்தையை சிறுவன் மற்றும் அவனது தாய் தள்ளி சென்று சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.