நாடு முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர். இதனிடையே, காதலர் தினத்திற்கு இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்பினாலும், மறுபக்கம் ஆதரவும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் காதலர் தினத்துக்கு பல்வேறு வரவேற்புகள் இருந்து வருகிறது. இதனிடையே, காதலர் தினத்தன்று காதலர்கள் மீது தாக்குதல் நடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில், ஹரியானா மாநிலம் குருகிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஷாகுல் என்பவர் தனது சமூகவலைதளத்தில் வித்தியாசமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்
அதில், காதலர் தினத்தை முன்னிட்டு துணைதேடும் இளம் பெண்களுக்கு பாய் ஃப்ரெண்ட் வாடகைக்கு என்று பதிவிட்டுள்ளார். மேலும், துணை இல்லாமல் தனியாக தவிப்போரின் கஷ்டம் எனக்கு தெரியும் என்றும் தற்போது வரை நான் 50 பெண்களை டேக் செய்துள்ளேன் என்றும் இந்த காதலர் தினத்தில் நீங்கள் தனிமையாக உணர்ந்தால் என்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.