
கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா வரவேற்பு நிகழ்ச்சிக்கு நடிகை திஷா பதானி அணிந்திருந்த ஆடை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எம்.எஸ்.தோனி வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் பிரபலமான திஷா பதானி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அவரது 42ஆவது படமாக உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார்.
அமிதாப் பச்சன் , பிரபாஸ் இணைந்து நடிக்கும் புரொஜெக்ட் கே படத்திலும் திஷாதான் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணமான சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதில் கலந்து கொண்ட திஷா பதானி அணிந்திருந்த ஆடை பேசு பொருளாகி உள்ளது. திருமண நிகழ்ச்சிக்கு இப்படியாக வருவீர்கள் என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். ஒரு ரசிகர், திஷா பதானி திருமண வரவேற்புக்கு வந்தாரா அல்லது கிளப்புக்கு வந்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
newstm.in