
டியூஷன் படிக்க வந்த 10ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜாராத் மாநிலம் அகமதாபாத் அருகே சந்த்கேதா பகுதியைச் சேர்ந்த கோவிந்த் படேல் (45) என்ற ஆசிரியர் தனது வீட்டில் மாணவர்களுக்கு ட்யூஷன் நடத்தி வந்தார். அவரிடம் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவனிக்கு, ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை காவல்துறையிடம் புகார் அளித்தார். மாணவனிடம் ஆபாச சைகைகளை காட்டியும், தவறான சீண்டகளை செய்தும் ஆசிரியர் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது போன்ற கொடுமைகளை செய்ததோடு மட்டுமல்லாது, மாணவரின் செல்போனுக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் மாணவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஆசிரியர் கோவிந்த் படேல் மீது போக்சோ, எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர் வேறு மாணவர்களிடம் இது போன்று நடந்து கொண்டாரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in