
திருச்சூர் மாவட்டம் வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ. 18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைஃப் மிஷன் திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து கடந்த 3 நாள்களாக சிவசங்கரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று இரவு அவரை கைது செய்தது. தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.