விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் தற்போது இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் பலர் மாறிவிட்டனர். இவருக்கு பதில் இவர் என்று அடிக்கடி இந்த சீரியலில் மாற்றம் வந்து கொண்டே வந்த நிலையில் இந்த சீரியலின் கதாநாயகி வெண்ணிலாவின் காலேஜ் பிரண்டாக தமிழ் கேரக்டரில் கானா பாடகர் ஹரி நடித்து வந்தார்.
கானா பாடகராகவும், ஒரு நடிகராகவும் பாடல் எழுதுபவராகவும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து சீரியலில் மலர், பாண்டியின் திருமணத்தின் போது பாடப்பட்ட பாடல் இவருடையது தான். இந்த பாடலில் இவர் எழுதி, பாடி, நடித்தும் இருப்பார்.
இவருடைய திறமைக்கு வாய்ப்புகள் அந்த அளவிற்கு கிடைக்காமல் இருந்தாலும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரோடு சீரியலில் நடித்த பல பிரபலங்கள் தொடர்ந்து இவருக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரோடு காற்றுக்கென்ன வேலி சீரியலில் நண்பனாக நடித்த ராகவேந்திரன் புலி, ஹரி, டேய் ஏண்டா? வில் யு மிஸ் யூ டா, இடியட், தற்கொலை என்பது ஒரு தீர்வாகாது. ரத்தம் சிந்திய நான் உனக்கு எத்தனை முறை அறிவுரை கூறியிருப்பேன். போடா! டேய், நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்று ஏமாற்றத்தோடும் வருத்தத்தோடும் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டி இருக்கிறார்.
ஒரு வார்த்தை யார்கிட்டயாவது பேசி இருக்கலாம். போன வாரம் கூட ஒருத்தங்களோட போன் நம்பர் குடுங்க என்று என்கிட்ட பேசினான். ரொம்ப நல்ல பையன், ஆனா எப்பவும் ஒரு தனிமையில் லோன்லியாக இருப்பான்.நான் அதிலிருந்து வெளியே வரவேண்டும்னு பலமுறை சொல்லி இருக்கிறேன். காற்றுக்கென்ன வேலி சீரியலில் நான் நடிக்கும் போது அவனிடம் தனியாக நானே பேசினேன். எதற்காக இப்படி இருக்கிறாய் என்று, அப்போதுதான் அவனோட எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் என்கிட்ட ஷேர் பண்ணினான். ஆனா இப்போ அவன் இல்லை.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
எல்லோருக்கும் ஒன்னே ஒன்னு நான் சொல்லிக்கிறேன். லைஃப்ல நாம என்னலாம் ஆசைப்படுறோமோ அதெல்லாம் கிடைச்சிராது. அது மட்டும் இல்லன்னா இந்த மாதிரி ஒரு முடிவு யாரும் எடுக்காதீங்க, என்னதான் எனக்கு அழுகை இருந்தாலும் அவன் மேல எனக்கு கோவம் தான் இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் ஹரி தற்கொலை செய்வதற்கு காரணம் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தான் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.