திருமண நிகழ்வின் போது மாமியார், மருமகனின் வாயில் சிகரெட் வைத்து வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் இந்த விசித்திர நிகழ்வு நடந்துள்ளது. இது அங்குள்ள சில கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய நிகழ்வு என்று கூறப்படுகிறது. சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரது மாமியார் வாயில் சிகரெட் வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து மாமனார் சிகரெட்டைப் பற்ற வைப்பது போல் பாவனை செய்கிறார், பிறகு அவரே சிகரெட்டை மணமகன் வாயில் இருந்து எடுத்து விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமகன் சிகரெட்டை புகைக்கவில்லை என்றும், ஒரு சம்பிரதாயத்துக்காக வாயில் சிகரெட் வைக்கப்பட்டது என்றும், வீடியோவை பகிர்ந்த நபர் விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சில நெட்டிசன்கள் அறிவுரை சொல்லுகின்றனர். அதே நேரத்தில் சிலர் வேண்டுமென்றே சமூக வலைதளத்தில் பதிவிட இவ்வாறு வீடியோ எடுக்கின்றனர் என்று விமர்சிக்கின்றனர்.
newstm.in