பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, நேற்று கவர்னர் மாளிகையில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங், ராதாகிருஷ்ணனுக்கு(65) பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஹேமந்த் சோரன், அமைச்சரவை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.
ஜூலை 2021 முதல் ஜார்க்கண்ட் கவர்னராக பணியாற்றிய ரமேஷ் பாயிஸுக்குப் பிறகு ராதாகிருஷ்ணன் நேற்று பதவியேற்றுள்ளார். முன்னதாக, இரண்டு முறை மக்களவை உறுப்பினராக ராதாகிருஷ்ணன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.