கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டம் சின்சொலி நகரில் உள்ள அரசு பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அரசு பேருந்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KA 38 F 971 பதிவு எண் கொண்ட அரசு டவுன் பஸ்ஸை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்.
பஸ் திருடபடும் காட்சி பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிள்ளது. உடனடியாக இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் நகரை சுற்றி உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் ஆய்வு செய்த போது திருடர்கள் சின்சொலி நகரில் இருந்து மிரியானா, தண்டூரா பகுதிகளை கடந்து தெலுங்கானா மாநிலத்திற்கு பேருந்தை கடத்தி சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தெலுங்கானா மாநிலத்திற்கு விரைந்த தனிப்படை பலே பஸ் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது.