ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கான புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டும் 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது.
அதே போல கடந்த ஆண்டு முதல் முறையாக சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டுக்கான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் அணிகள் தங்கள் அணியின் கேப்டன்கள் யார் என்ற அறிவிப்பை வெளியிடுகின்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் விபத்து ஏற்பட்டு ஓய்வில் இருப்பதால், டேவிட் வார்னர் அணியை வழிநடத்த இருக்கிறார்.
அதே போல் ஹைதராபாத் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
newstm.in