பெண்களின் சாதனைக்கு ஊன்றுகோலாக இருந்த ஜெயலலிதாவுக்கு பிடித்த 5 பெண்கள் இவங்க தானாம்..!!

தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பெரும்பாலாக அனைத்து பெண்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளனர் ஜெயலலிதா. பெண்களின் சாதனைக்கு ஊன்றுகோலாக இருந்த அவருக்கு பிடித்த 5 பெண்கள் யார் தெரியுமா?

சந்தியா: ஜெயலலிதாவின் அம்மா சந்தியா. இவர் ஜெயலலிதாவின் அம்மா என்பதையும் தாண்டி ஒரு தோழியாக, சிறந்த வழிகாட்டியாக ஜெயலலிதாவுக்கு இவர் இருந்துள்ளார். தனது 2 வயதிலே தந்தையை இழந்ததால் தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயதில் ஜெயலலிதாவுடன் அவரது அம்மா சந்தியா அதிக நேரம் செலவழித்ததில்லை. குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று நடிப்பதில் பிசியாக இருப்பார் சந்தியா. இருந்தாலும் தாயின் மேல் தீராத அன்பு கொண்டிருந்தார். ஜெயலலிதா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தியா ஜெயலலிதாவுடன் மட்டுமே இருப்பார். ஜெயலலிதாவுக்கு வாழ்க்கையின் முன்மாதிரியாகவும் அவரது அம்மா சந்தியா இருந்துள்ளார்.

கேத்ரின் சைமன் : ஜெயலலிதா தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவதை அனைவரும் ரசிப்பர். அவரது ஆங்கில மொழி திறமையை பல்வேறு நாட்டு தலைவர்கள் கூட பாராட்டியுளளனர். சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் ஜெயலலிதா படித்த போது அவரது ஆசிரியராக இருந்த கேத்ரின் சைமன் தான் இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். இவரது தனிக்கவனிப்புதான் பின் நாளில் ஜெயலலிதாவின் ஆங்கில புலமைக்கு காரணமாக இருந்துள்ளது.

இந்திரா காந்தி: ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர். ‘ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல’ என்பதை நிரூபித்து காட்டியவர் இந்திரா என்று சொன்னால் மிகையாகாது. அவரது அதிரடி நடவடிக்கைகளால் இந்தியாவின் ‘இரும்புப்பெண்மணி’ என்று அழைக்கப்படுகிறார் இந்திரா. இந்தியாவில் ‘இரும்புப்பெண்மணி’ இந்திரா காந்தி என்றால் தமிழகத்தில் ஜெயலலிதா என்று கூறுவர்.

1984ல் ராஜ்ய சபாவில் ஜெயலலிதாவின் பேச்சால் கவரப்பட்ட இந்திரா காந்தி , பின்னர் அவருடன் மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். பின்நாளில் இந்திரா காந்தியை அம்மா என்று அழைக்கும் அளவிற்கு அவர் மீது ஜெயலலிதா அன்பு கொண்டிருந்தாராம். இருவரும் அரசியலில் இருந்த கால கட்டடத்தில் நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர்.

ஆச்சி மனோரமா : திரைப்படங்களில் நடிக்கும் போதே ஆச்சி மனோரமாவும், ஜெயலலிதாவும் நெருங்கிய தோழிகள். தனி வாழ்வில் துன்பம் வரும் போதெல்லாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளனர். இருவருமே திரையுலகில் சாதனை படைத்த ஜாம்பவான்கள்.

மனோரமா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்று ஜெயலலிதா கூறுவார். ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபிறகு, மனோரமா அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். மனோரமா மறைந்த நேரத்த்தில், ‘‘தன் அம்மாவுக்குப் பிறகு, தன்னை ‘அம்மு’ என பாசத்தோடு அழைக்கும் மனோரமா, தனக்கு மூத்த சகோதரி என்று கூறினார். இவ்வாறு இருவரது நட்பு பற்றி கூறிக்கொண்டே போகலாம்.

சசிகலா: ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின் அவரை சசிகலா இல்லாமல் பார்க்க முடியாது. இருவரும் ஒட்டிப்பிறந்த சகோதரிகள் போன்று இருப்பர். ஜெயலலிதாவுக்கு கடைசி வரை உடன் இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் நிழலாக தொடரும் அளவிற்கு நம்பிக்கையை பெற்றிருந்தார் சசிகலா. இவரின் சகோதரி மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து பிரமாண்ட திருமணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவின் இறுதி நேரத்திலும் சசிகலா தான் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.