ஆர்பிஐ அதிரடி… இந்த 5 வங்கிகளில் பணம் எடுக்க, செலுத்த கட்டுப்பாடு!!

குறிப்பிட்ட 5 கூட்டுறவு வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

அதன்படி, ஹெச்.சி.பி.எல் கூட்டுறவு வங்கி, உரவகொன்டா கூட்டுறவு நகர வங்கி, ஆதர்ஷ் மஹிளா நகரி சஹகாரி வங்கி மர்யாதித், சிம்ஷா ஷங்கரா வங்கி நியமிதா, ஷங்கர்ராவ் மோஹிதே பாடீல் ஷஹகாரி வங்கி ஆகிய 5 வங்கிகளில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் இனி இந்த வங்கிகள் புதிதாக டெபாசிட் அல்லது கடன் வழங்க முடியாது. மேலும், இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வங்கிகளில் மோசமான நிதி நிலைமை இருப்பதால் ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தங்கள் வைப்பு தொகையின் மீது அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஆவணங்களை சமர்பித்து ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

வங்கியின் உரிமங்கள் ரத்தாகி விட்டதாக வாடிக்கையாளர்கள் தவறாக புரிந்து கொள்ள கூடாது எனவும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. நிதி நிலைமை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் இவை இயங்கும்.

சமீப காலமாகவே, பலவீனமான கூட்டுறவு வங்கிகளை கண்டறிந்தை அவற்றின் மீது ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், பல வங்கிகளின் உரிமங்களை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.