பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்யபிரதா முகர்ஜி வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு வயது 91 . இவர் 1999 – 2004 வரையிலான வாஜ்பாய் ஆட்சியில் ரசாயனம் மற்றும் உரங்கள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு சத்யபிரதா முகர்ஜியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“முன்னாள் மத்திய அமைச்சர் திரு சத்ய பிரதா முகர்ஜியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கு வங்க மாநிலத்தில் பிஜேபியை நிர்மாணித்ததில் முக்கியப் பங்காற்றிவர் திரு சத்யபிரதா முகர்ஜி. அவர் தமது அறிவாற்றலாலும், சட்ட நுணுக்கங்களாலும் மதிக்கப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.”