பிரபல நடிகை தனது முதலிரவுக்கு அலங்கரிக்கப்பட்ட அறையின் போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் இந்தியில் மிக முக்கியமான நடிகையாக கருதப்படுகிறார். இவர் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். தனுஷ் உடன் ராஞ்சனா என்ற இந்தி படத்தில் இவர் நடித்திருந்தார்.
அந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. இவர் அண்மையில் இளம் அரசியல் தலைவரை திருமணம் செய்து கொண்டார். அந்த நபர் இஸ்லாமியர் என்பதால் பலரும் ஸ்வரா பாஸ்கரை விமர்சித்து வந்தனர்.
ஆனால் அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்வரா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் உச்சபட்சமாக தங்களது முதலிரவுக்காக அறை அலங்கரிக்கப்பட்ட படத்தை ஸ்வரா பாஸ்கர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
முதலிரவு அறையை தனது அம்மா ரோஜா மலர்களால் அலங்கரித்துள்ளதாக ஸ்வரா பகிர்ந்திருந்தார். இதற்கு நெட்சன்கள் பலரும் எதிர்மறையான கருத்துகளை கூறியுள்ளனர். வெளிப்படையாக இருப்பது சரிதான், ஆனால் இவ்வளவு வெளிப்படைத்தன்மை தேவை இல்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in