
வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக லட்சக் கணக்கில் சம்பவம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வேலையை உதறிவிட்டு தற்போது கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.
கேரளாவை சேர்ந்த சாந்தனு (33) என்ற இளைஞர் நாகர்கோயிலில் உள்ள பொறியில் கல்லூரியில் பி.இ. கம்ப்யூடர் சயின்ஸ் பட்டம் பெற்று மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்தார்.
தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றினார். இவர் மனைவி தேவிகா மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். இவருக்கு வேலையை விட்டுவிட்டு கோயிலில் பூசாரியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஏனென்றால் இவரது தந்தை நாராயணன் நம்பூதிரி, புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலின் தலைமை அர்ச்சகர். பகவதி அம்மன் கோயில் பூசாரியாக வேண்டும் என்ற எண்ணத்தை மனைவி, தந்தையிடம் கூறினார்.
அவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், வேலையை உதறிவிட்டு, குடும்பம் பரம்பரையாக வேலை பார்த்து வந்த ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.
வருமானம் அதிகம் கிடைத்தாலும் மனத்திற்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சாந்தனு, தற்போது பகவதி அம்மனுக்கு சேவையை செய்யும் வாய்ப்பை பெற்று நிம்மதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
newstm.in