நடிகர் சிம்புவுக்கு ரசிகர்கள் முன்னிலையில்தான் திருமணம் நடக்கும் என்று அவரது ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் பத்துதல திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பத்துதல படம் வெற்றி அடைய வேண்டும் என்று உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடு நடத்தினார். 108 தேங்காய் உடைத்து படத்தின் வெற்றிகாக வேண்டிக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அங்கு குவிந்த சிம்பு ரசிகர்கள், பொதுமக்களுடன் கூல் சுரேஷ் செஃல்பி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பத்துதல திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறு என்று கூறினார்.
பின்னர் நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நடிகர் சிம்புவுக்கு திருமணம் நடந்தால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தான் நடைபெறும். அப்படித்தான் டி. ராஜேந்தர் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார். அவரது திருமணம் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.
newstm.in