
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார். சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்த நிலையில் தொடர்ந்து ஏப்ரல் 9 ஆம் தேதி முதுமலை வருகிறார். ஆஸ்கர் விருது வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் , பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்த தகவலை மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டு புலிகள் பாதுகாப்பு நிகழ்வைக் கொண்டாடும் வகையில் பந்திப்பூர், முதுமலை, வயநாடு சரணாலயங்களைப் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அதில் ஆஸ்கர் விருது பெற்ற “The Elephant Whisperers” நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதிகளைச் சந்திக்கவுள்ளார்.
முன்னதாக “The Elephant Whisperers” திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, அறிவார்ந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறினார். இக்குழுவினர் இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.