மலேசியாவில் மீன் சாப்பிட்ட 83 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோகூரில் வசித்து வந்த தம்பதி, வழக்கமாக வாங்கும் கடையில் மீன் வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்கள் சாப்பிடது பஃபர் என்ற வகை மீன் என தெரியவந்துள்ளது.
சாப்பிட்டதும் 83 வயது மூதாட்டி உயிரிழந்தார். அவரது கணவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் அந்த முதியவபர் பஃபர் வகை மீனை வாங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரும் பல ஆண்டுகளாக அதே மீன் சந்தையில் மீன் வாங்கி சமைத்து வந்துள்ளனர். ஆனால் பஃபர் வகை மீனில் விஷம் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. மீன் சாப்பிட்டதும் மூச்சுத்திணறல் முதலில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் மூதாட்டி உயிரிழந்தார். அந்த மீனில் நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in