அண்ணாமலைக்கு 15 நாட்கள் கெடு! திமுக அதிரடி!!

தி.மு.க மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அண்ணாமலை 15 நாட்களுக்குள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியமா என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1972இல் எம்.ஜிஆர் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் கொடுத்தபோது கலைஞர் அவர்கள் பார்த்தேன், படித்தேன், ரசின்தேன் என்று சொன்னார்.

அதுபோன்று அண்ணாமலை கூறியுள்ளதைப் பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. உண்மையைச் சொல்லி அண்ணாமலைக்குப் பழக்கமில்லை. ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டார் என கூறினார், அவர் உயிரோடு இருக்கிறார். அதுபோலத்தான் குற்றச்சாட்டுகளும் என்றார்.

ரபேல் வாட்ச் வாங்கிய ரசீதைக் காட்டுவேன் என கூறிய அண்ணாமலை ரசீதைக் காட்டினாரா, வெறும் சீட்டு ஒன்றைக் காட்டி பத்திரிகையாளர் சந்திப்பின் துவக்கத்திலேயே ஏமாற்றித்தான் தொடங்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என எத்தனையோ பேர் தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த பார்த்து முடியாமல் போனது. இவர்களை விட அண்ணாமலை ஒன்றும் அறிவார்ந்த மேதையல்ல. அண்ணாமலை யாருக்கு பூ சுற்றுகிறார் என்று தெரியவில்லை.

தி.மு.கவினர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குத்தொடுத்தால் அண்ணாமலையின் சுற்றுப்பயணம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களாகத்தான் இருக்கும். ஆருத்ராவில் பணத்தை இழந்தவர்கள் நேரடியாகக் கமலாலயம் சென்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த மோசடியைத் திசை திருப்புவதற்காக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அண்ணாமலைக்கு புதிதாக ஒரு பெயர் வைத்துள்ளனர் மக்கு மலை என்று. எதற்கும் தி.மு.க அஞ்சாது.

ஆளுநரையே கண்டித்து தீர்மானம் போடும் ஆற்றல் இந்தியாவிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் உள்ளது. தி.மு.கவில் இருப்பவர்களை பொருத்தமட்டில் தங்கள் மடியில் கணமில்லை. வழியில் எங்களுக்குப் பயமில்லை என தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.