
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏஐடியூசி) தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. பெரியசாமி எழுதிய கடிதத்தில், “தற்போது கோடை வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது.
ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து தேவைக்கும் குறைவாகவே பீர் பாட்டில்கள் விநியோகம் செய்வதால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள், பீர் பாட்டில் கேட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தமிழ்நாடு அரசு, மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைதுறை அமைச்சர், தற்போது நடைமுறையில் உள்ள கொள்முதல் விதிமுறைகளில் பொருத்தமான திருத்தங்களை செய்து, அருகில் உள்ள புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள பீர் உற்பத்தி ஆலைகளிலிருந்து தமிழ்நாட்டின் விற்பனைக்கு தேவையான ” பீர்” பாட்டில்கள தட்டுப்பாடு இல்லாமல் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.