தெலுங்கானாவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் 24 விரல்கள் கொண்ட குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருக்கிறார். பொதுவாகவே 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகளை நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருப்போம்.அப்படி 6 விரல்களோடு பிறக்கும் குழந்தைகள் அரிது. ஆனால், தெலுங்கானாவில் பிறந்திருக்கும் இந்த குழந்தை மொத்தமாக 24 விரல்களோடு பிறந்திருப்பது அரிதிலும் அரிது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த ராவளி என்ற பெண் நேற்று பிரசவ வலி ஏற்பட்டு ஜாகிட்யா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டுள்ளார். இவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.ஆனால், குழந்தை முழுமையாக வெளியே வந்ததும் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் மருத்துவர்கள். காரணம், அந்த குழந்தைக்கு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் இருந்துள்ளன. இதனால், மொத்தமாக அந்த குழந்தையின் உடலில் 24 விரல்கள் இருந்துள்ளது. மேலும், அந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் மெல்ல மெல்ல சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பரவ துவங்கியதும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த குழந்தை தெய்வத்தின் அவதாரம் என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த குழந்தைதான் சோசியல் மீடியா ட்ரெண்ட் ஆகி வருகிறது.