நாடு முழுவதும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதிவிட்டு, 38 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். தற்போது நாடு முழுவதும் விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சி.பி.எஸ்.சி. 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் குறித்து சிபிஎஸ்இ இதுவரை எதையும் உறுதி செய்யவில்லை.
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதியும் நிறைவு பெற்றது. இந்தப் பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 35 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள, மாணவரின் தேர்வு எண், பிறந்த தேதி, பள்ளியின் எண், தேர்வெழுதிய மையத்தின் எண் ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.