
காணாமல் போன ஐஃபோன் மீண்டும் கிடைத்துள்ள நிலையில், நண்பர்கள் யாரை நம்புவது என்று தெரியவில்லை என நடிகை ஷம்மு ஷாலு வேதனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பிரபலமான துணை நடிகை ஷம்மு ஷாலு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன் ஒன்றை வாங்கினார். அவர் கடந்த 9ஆண் தேதி சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும்போது செல்போன் காணாமல் போயுள்ளது. இதனை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடி பார்த்தார்.

செல்போன் கிடைக்காததால், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சூளைமேட்டில் தன்னுடன் தங்கி இருந்தவர்கள் பெயர் பட்டியலை போலீசில் கொடுத்தார். இந்த நிலையில், ஷாலு ஷம்முவுக்கு டன்சோ மூலம் பார்சல் ஒன்று வந்தது. அதில், காணாமல் போன செல்போன் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தாம் சந்தேகப்பட்ட நபர் தனது செல்போனை திருடியதாகவும், 8 வருட நட்பு வீணாகியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், யாரை நம்புவது என்று தெரியவில்லை என்றும் அவர் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.
newstm.in