ஆருத்ரா, ஏ.ஆர்.டி. ஹிஹாவு நிறுவனங்களை தொடர்ந்து பிராவிடண்ட் டிரேடிங் கம்பெனியும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சிவசக்திவேல் என்பவர் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் வட்டி தருவதாக கூறி ரூ.2,000 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுகின்றனர்.
கடந்த 8 மாதங்களாக வட்டி மற்றும் அசலை திருப்பிக் கொடுக்காமல் துபாய்க்கு சிவசக்திவேல் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனையறிந்த முதலீட்டாளர்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.