சென்னை: நேற்று காலை உயிரிழந்த விஜயகாந்த்துக்கு இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. அதனையடுத்து கோயம்பேட்டில் அமைந்திருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புரட்சி கலைஞர், கேப்டன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இனிக்கும் இளமை படத்தில் அறிமுகமாகி 150 படங்கள்வரை நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலான
