வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பதவி காலம் நிறைவடையும் முன்பே தேர்தல் ஆணையராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருண் கோயல் இன்று திடீரென ராஜினமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் தலைமை ஆணையராக ராஜிவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.அனுப் பாண்டடேவின் பதவிகாலம் கடந்த பிப்.,15 ம் தேதி ஓய்வு பெற்றார்,.
ராஜிவ் குமாருக்கு முன், தலைமை ஆணையராக இருந்த சுசில் சந்திரா கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, ராஜிவ் குமார் தலைமை ஆணையராக பொறுப்பேற்றார். இதனால், ராஜிவ் வகித்த ஆணையர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், கனரக தொழிற்சாலை துறை செயலராக இருந்த அருண் கோயல், தேர்தல் ஆணையராக கடந்த 2022ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.இவரது பதவி காலம் 2027 வரை உள்ளது.
2025ல் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த பபரப்பான சூழ்நிலையில் பதவி காலம் நிறைவடையும் முன்பே தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அருண் கோயல் ராஜினாமா செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ராஜினாமா கடித்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார் அருண் கோயல். அவரது ராஜினாமா வை ஜனாதிபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
தேர்தல் ஆணையத்தில் மூவர் கொண்ட குழுவில் தற்போது ராஜிவ் குமார் மட்மே பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அருண் கோயல் ஆணையராக நியமிக்கப்பட்ட போதை சரச்சைகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
மீண்டும் ஒரே தலைமை?
மீண்டும் ஒரே தலைமை தேர்தல் ஆணையர் என்ற முறைககு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் தேர்தல் கமிஷன் டி.என்.சேஷன் இருந்த போது ஒற்றை தலைமை நடைமுறையில் இருந்து வந்தது. அவர் எடுத்த தே்ர்தல் சீர்திருத்த நடவடிக்கை காரணமாக தலைமை தேர்தல் ஆணையருக்கு கீழ் இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. தற்போது மீண்டும் ஒரே தலைமை முறைக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement