திருப்பூர் நல்லிக்கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (60). இவரின் மனைவி சித்ரா. சந்திரசேகர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இத்தம்பதியினரின் 60-வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனர். காரை சந்திரசேகரின் இளைய மகன் இளவரசன் ஓட்டி வந்தார்.

கார் வெள்ளக்கோவில் அருகே வந்தபோது எதிரே திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் முழுவதுமாக பேருந்துக்கு அடியில் சென்றது. இந்த விபத்தில் காரில் பயணித்த சந்திரசேகர், சித்ரா அவர்களது மகன் இளவரசன், மருமகள் அரிவித்ரா மூன்று மாதக் குழந்தை சாக்ஷி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த சந்திரசேகரின் மற்றொரு மகன் சசிதரன் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY