கூகுள் குரோம் யூசர்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் அவசர எச்சரிக்கை..!

Central Government Warning : மத்திய அரசின் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்புக்குழு அவ்வப்போது ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அதுஎன்னவென்றால் உலகம் முழுவதும் ஏற்படும் சைபர் மோசடிகள்  மற்றும் ஹேக்கிங் எதனால் ஏற்படுகிறது, எவ்வழிகளில் எல்லாம் இணையவாசிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக இந்தியாவில் இணையவாசிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து நாட்டு மக்களை எச்சரிக்கும். Indian Computer Emergency Response Team என இந்த குழுவிற்கு பெயர். இதன் சுருக்கமே CERT-In ஆகும். தமிழில்  சொல்வது என்றால் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (CERT-In) என கூறலாம். அந்த குழுகொடுக்கும் எச்சரிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதனை செய்தால் இணைய மோசடிகள் மற்றும் சைபர் அட்டாக்கில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இல்லையென்றால் சிக்கல் தான்.

அந்த குழு இப்போது கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை கொடுத்துள்ளது. குறிப்பாக, டெஸ்க்டாப் தளங்களில் Google Chrome -ஐப் பயன்படுத்துபவர்களுக்கு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சைபர் மோசடியாளர்கள் கணினிகளில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் கணிணியை கட்டுபாட்டில் எடுத்துக்கொள்ளவும் செய்வார்கள் என கூறியுள்ளது.

அதாவது, கூகுள் குரோமை உடனே அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக Windows மற்றும் Mac -க்கான 136.0.7103.113/.114 க்கு முந்தைய Google Chrome பதிப்புகளுக்கும், Linux க்கான 136.0.7103.113 க்கு முந்தைய பதிப்புகளையும் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படும்.

இந்த குறைபாடுகள் உள்ள பதிப்புகளை கணிணியில் பயன்படுத்தப்பட்டால் முக்கியமான தகவல் வெளிப்பட வாய்ப்புள்ளது. உங்கள் கணிணி செயலற்ற தன்மைக்கு செல்லவும் வழிவகுக்கும் என்று CERT-In எச்சரித்துள்ளது. மேலே குறிப்பிட்ட வெர்சன்களில் உள்ள கம்ப்யூட்டர் பிரவுசர்களில் போதுமான கொள்கை அமலாக்கம் இல்லாததாலும், Chrome இல் இடை-செயல்முறை தொடர்புக்கு பொறுப்பான ஒரு கூறு மோஜோவில் முறையற்ற கையாளுதலாலும் பாதிப்புகள் ஏற்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது.

ஆலோசனையின்படி, ஒரு ஹேக்கர் ஒரு பயனரை தீங்கிழைக்கும் வலைப்பக்கத்திற்கு ஈர்த்து அதன் மூலம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் சிக்கலை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என மத்திய சைபர் செக்யூரிட்டி அமைப்பு எச்சரித்துள்ளது. Windows, macOS மற்றும் Linux இயங்குதளங்கள் உட்பட டெஸ்க்டாப் அமைப்புகளில் Google Chrome ஐப் பயன்படுத்தும் அனைத்து பயனர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பயனர்கள் தங்கள் பிரவுசரை Google வழங்கிய சமீபத்திய பதிப்பிற்கு உடனடியாகப் புதுப்பிக்குமாறு CERT-In அறிவுறுத்தியுள்ளது. தொடர்புடைய பாதுகாப்புத் திருத்தங்கள் Chrome பதிப்புகள் 136.0.7103.113 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் Chrome இன் இன்பில்டு அப்டேட் பொறிமுறையின் மூலம் அல்லது அதிகாரப்பூர்வ Chrome வெளியீடுகள் வலைப்பதிவைப் பார்வையிடுவதன் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.