தினமலர்
தரமான கல்வி, திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்: மோடி| Dinamalar
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் தரமான கல்வியை உலகமயமாக்கல், திறன் மேம்பாடு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இணைய கருத்தரங்கு டில்லியில் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று துவக்க உரையாற்றினார். அவரின் உரை: நம் நாட்டின் இளம் தலைமுறைதான் வருங்காலத் தலைவர்கள். ஆகையால், இளம் தலைமுறையினரை மேம்படுத்துவது … Read more
'ஹவ் டூ நேம் இட்' 2ம் பாகம்: இளையராஜா அறிவிப்பு
ஆயிரத்தி நானூறு படங்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறார் இளையராஜா. தற்போது பியூட்டிபுல் பிரேக்அப் என்ற ஆங்கில படத்திற்கும் இசை அமைக்கிறார். அவரது பாடலை பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது. தனது சகோதரர் கங்கை அமரனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படி பல பாசிட்டிவான விஷயங்கள் இளையராஜாவுக்கு நடந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். திரைப்பட பாடல்களோடு இளையராஜாவின் இசை ஆல்பங்களும் உலக புகழ்பெற்றவை. பாடல் இல்லாமல் … Read more
நீச்சல் உடையில் தர்ஷா குப்தா
சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா, சினிமாவிலும் நடிக்க தொடங்கி உள்ளார். சமூகவலைதளத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வரும் தர்ஷா, தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் சின்னத்திரைக்கு தற்காலிகமாக ப்ரேக் போட்டுள்ளார். இந்நிலையில், ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள அவர், கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை பார்த்து ரசித்து … Read more
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar
புதுடில்லி: இந்தியாவில் நேற்று 19,968 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரம் பேராக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,051 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,28,38,524 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 37,901 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,21,24,284 ஆனது. தற்போது … Read more
சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்; மீண்டும் வில்லனாக நடிக்கும் பரேஷ் ராவல்
இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் சூரரைப்போற்று. டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். மீண்டும் சுதாவே ஹிந்தி ரீமேக்கையும் இயக்கப்போகிறார். இந்த நிலையில் தற்போது சூரரை போற்று படத்தில் வில்லனாக நடித்த பரேஷ் ராவல் ஒரு பேட்டியில், சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்த எனது நடிப்புக்கு நல்ல வரவேற்பு … Read more
உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு துாதரகம் அறிவுரை| Dinamalar
கீவ்-ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைனை விட்டு வெளியேற, இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய துாதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. … Read more