ஷிவானியின் கலக்கல் கிளாமர் போட்டோ

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிக்பாஸ் சீசன்- 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பொன்ராம் இயக்கும் படங்களிலும் நாயகியாக நடிக்கிறார். மேலும் சோசியல் மீடியாவில் அதிரடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது கருப்பு நிற புடவை அணிந்து தான் எடுத்துள்ள கலக்கலாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகின.

ஹாங்காங்கில் 3 வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி!| Dinamalar

ஹாங்காங் : ‘மூன்று வயது குழந்தைகளுக்கும் இன்று(பிப்.,15) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என, ஹாங்காங் அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐந்து வயது குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே … Read more

முதன் முறையாக அப்பாவுடன் இணைந்து நடிக்கும் லட்சுமி மஞ்சு

தெலுங்கில் முன்னணி நடிகர் மோகன்பாபு. இவரது மகன் விஷ்னு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் லட்சுமி மஞ்சு தமிழில் கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் முதன் முறையாக தனது தந்தை மோகன்பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு … Read more

3 வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி| Dinamalar

ஹாங்காங் : நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில்உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று முதல், 3 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் : நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில்உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! … Read more

ஆன்மிக குருவுடன் வெளிநாடு சென்றார்; முன்னாள் அதிகாரி குறித்து செபி தகவல்| Dinamalar

புதுடில்லி : தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆன்மிக குரு, சித்ராவின் சிகை அலங்காரம் குறித்து யோசனைகள் சொன்னதாகவும், அவருடன் செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றதாகவும், ‘செபி’ அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்புஎன்.எஸ்.இ., எனப்படும், தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, 2013 – 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தேசிய பங்கு சந்தையின் குழு இயக்க அதிகாரி மற்றும் … Read more

மகான் படத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்கம் ஏன்? கார்த்திக் சுப்புராஜ்

விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் நடித்திருந்தார்கள். ஆனால் படத்தில் வாணி போஜன் நடித்த காட்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதுகுறித்து வாணிபோஜன் ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது: கதைப்படி சிம்ரனை விக்ரம் பிரிந்த பின்னர் வாணி போஜனுடன் அவருக்கு காதல் ஏற்படுகிறது. அவருடன் வாழ்கிறார் என்பது … Read more

இம்ரானிடமிருந்து 3வது மனைவி பிரிவு?| Dinamalar

இஸ்லாமாபாத் : பாக்., பிரதமர் இம்ரான்கானை விட்டு அவரின் மூன்றாவது மனைவி, புஷ்ரா மனேகா பிரிந்து தனியே வசிப்பதாக தகவல்வெளியாகியுள்ளது.பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,பாகிஸ்தான் – டெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், ஜெமீமா கோல்டுஸ்மித், ரெஹம் கான் ஆகியோரை மணந்து பிரிந்தவர். கடந்த, 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். புஷ்ராவுக்கு முன்னாள் கணவர் வாயிலாக, ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர்கள் யாரும் தன் வீட்டிற்கு … Read more

தமிழ் சினிமாவின் முக்கிய காதல் ஜோடியின் காதலர் தின வாழ்த்து

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வரும் காதல் ஜோடி யார் என்பது அனைவருக்குமே தெரியும். இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தான் அந்த ஜோடி. இருவருக்கும் திருமண நிச்சயம் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடிகளாகத்தான் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது தன்னுடைய சமூக வலைத்தளங்களில் ஜோடியான புகைப்படங்களைப் பதிவிட்டு பலரையும் பொறாமைப்பட வைப்பது விக்னேஷ் சிவனின் வழக்கம். இன்று காதலர் தினம் என்பதால் சும்மா இருப்பாரா…?. அவருக்கு … Read more