முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படைவீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. “தலைநிமிரும் தமிழகம்” தொலைநோக்குத் திட்டங்களில் … Read more முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசு உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயா்ந்து 74.40-இல் நிலைப்பெற்றது. இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான நிலவரம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு ஆகியவை அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு தொடா்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் பெறுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தன. இதனால், சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்து காணப்பட்ட போதும் அது இந்திய ரூபாயின் மதிப்பில் … Read more டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசு உயா்வு

இலங்கை ஆறுதல் வெற்றி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரை இந்தியா கைப்பற்ற, கடைசி ஆட்டத்தில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 43.1 ஓவா்களில் 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இலங்கை 39 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் அடித்து வென்றது. முன்னதாக டாஸ் … Read more இலங்கை ஆறுதல் வெற்றி

குழந்தையைக் காப்பாற்றிய பின் மரணித்த தாய்: சீனாவில் நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்

சீன வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தாய் தனது குழந்தையைக் காப்பாற்றிய பின் இறந்தது மீட்புப் பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள்கிழமை  பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் … Read more குழந்தையைக் காப்பாற்றிய பின் மரணித்த தாய்: சீனாவில் நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்

வென்ட் இந்தியா லாபம் ரூ.5 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த வென்ட் இந்தியா நிறுவனம் 2021 ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.5.34 கோடியை ஈட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.36.83 கோடியை எட்டியுள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய விற்பனையுடன் ஒப்பிடுகையில் 94 சதவீதம் அதிகம். மதிப்பீட்டு காலாண்டில் … Read more வென்ட் இந்தியா லாபம் ரூ.5 கோடி

அதிமுக மகளிரணி செயலராக பா.வளர்மதி நியமனம்

அதிமுகவின் மகளிரணி செயலாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கட்சி இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா. வளர்மதி, கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் வைகைச்செல்வன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அதேசமயம், கட்சி மகளிர் அணி செயலாளராக, முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியும், இணை … Read more அதிமுக மகளிரணி செயலராக பா.வளர்மதி நியமனம்

கேன்ஃபின் ஹோம்ஸ் லாபம் ரூ.109 கோடி

கேன்ஃபின் ஹோம்ஸ் முதல் காலாண்டில் ரூ.108.85 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.450.84 கோடியாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், நிறுவனம் 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.522.50 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. கணக்கீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.93.15 கோடியிலிருந்து 17 சதவீதம் அதிகரித்து … Read more கேன்ஃபின் ஹோம்ஸ் லாபம் ரூ.109 கோடி

‘இதுவரை 42.75 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை (ஜூலை 22) வரை 42.75 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 42.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணையாக 33,65,24,833 பேருக்கும், இரண்டாது தவணையாக 9,09,75,439 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. Source link

2-ஆவது நாளாக பங்குச் சந்தை முன்னேற்றம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் மந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், அநேக முதலீட்டாளா்களின் எதிா்பாா்ப்பான ஸோமாட்டோ பங்குகள் பட்டியலிடப்பட்டதையொட்டி சந்தைகள் சற்று சூடுபிடித்தது. இருப்பினும், இந்த உத்வேகம் நெடுநேரம் நீடிக்கவில்லை. பெரும்பாலான நேர வா்த்தகம் எதிா்மறை நிலையிலேயே காணப்பட்டது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின். வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள், மருந்து, வங்கி துறை … Read more 2-ஆவது நாளாக பங்குச் சந்தை முன்னேற்றம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் அதிகரிப்பு

மகாராஷ்டிர நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி

மகாராஷ்டிர நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில், மகாராஷ்டிரத்தின் ராய்காட்டில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மகாராஷ்டிர ராய்காட்டில் ஏற்பட்ட … Read more மகாராஷ்டிர நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி