எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜெகதீஷ் ஷெட்டர் – டிக்கெட் நிராகரிக்கப்பட்டதால் விரக்தி

பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா இதுவரை 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சமண் சவதி போன்றோருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் கடும் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துவிட்டார். அவரை … Read more

பெங்களூருவில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது தடியடி..!

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டரில் டிக்கெட் விற்கப்பட்டது. சில மணி நேரத்தில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் நீண்டநேரம் காத்திருந்து ஏமாந்து போன ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களுக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து மைதானத்தின் நுழைவு வாயில் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். சாலையோரம் … Read more

நேபாளத்தில் பாறையில் இருந்து தவறி விழுந்து இந்தியர் உயிரிழப்பு

காத்மாண்டு, கிழக்கு நேபாளத்தின் பஞ்ச்தார் மாவட்டத்தில் 34 வயதான இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பிக்ரம் சகாப்த நாட்காட்டியின்படி நேபாளத்தில் வெள்ளிக்கிழமை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சிக்கிம் மாநிலத்தில் வசிக்கும் கேசவ் குருங் என்பவர் நேபாள புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தனது நண்பர்கள் 4 பேருடன் கிழக்கு நேபாளத்தில் உள்ள சுற்றுலாத் தலமான சிவா பன்ஜியாங்கிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அங்கிருந்து திரும்பும் போது மலையிலிருந்து … Read more

'என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 56 கேள்விகள் கேட்டனர்' – கெஜ்ரிவால் தகவல்

புதுடெல்லி, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை முடித்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மதுபான கொள்கை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் சுமார் 56 கேள்விகள் கேட்டனர். அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் நான் பதில் அளித்தேன்’ என்று தெரிவித்தார். இந்த ஊழல் வழக்கு பொய்யானது என கூறிய கெஜ்ரிவால், இந்த … Read more

சாம்சன், ஹெட்மயர் அதிரடி : 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

அகமதாபாத், ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சஹா 4 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய சாய் சுதர்சன் 20 … Read more

ஹிஜாப்பை அகற்ற பெண்களை ஊக்குவிப்பவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு – வெளியான பரபரப்பு உத்தரவு

டெஹ்ரான், ஈரான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறி மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண்ணை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த ஈரான் … Read more

தேர்தல் நடத்தை விதிமீறல்: பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறை – உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு

ராம்பூர், உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மிலாக் தொகுதி எம்.எல்.ஏ., ராஜ்பாலா சிங். பா.ஜனதாவை சேர்ந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. உரிய அனுமதி பெறாமல் பிரசார கூட்டம் ஒன்றை நடத்தியதற்காக ஷாசாத் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்பாலா சிங் எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மாதம் சிறையும், … Read more

பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி

நாமக்கல் நாமக்கல்: பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி காகித ஆலை தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். தொழிலாளர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கிரிநாத் (வயது 21). சிவகங்கையை சேர்ந்தவர் ஹரிகரன் (21). இவர்கள் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை அவர்கள் 2 பேரும் பள்ளிபாளையம் பாப்பம்பாளையம் பகுதியில் முனியப்பன் கோவில் பின்புறம் காவிரி ஆற்றில் … Read more

16வது பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டெடிவிலி பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒரு நபரின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோர் கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என பலர் பங்கேற்றனர். அப்போது பார்ட்டியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் … Read more

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாதுகலெக்டர் சதீஷ் எச்சரிக்கை

குடகு- எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கலெக்டர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேட்புமனு தாக்கல் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதுபோல் நேற்று குடகு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சதீஷ், மடிகேரியில் உள்ள தனது அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:- சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 13-ந் தேதி வேட்புமனு … Read more