இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்கிறது: ரஷ்யா

மாஸ்கோ: இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்வதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற நேட்டோ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையை மையப்படுத்தி ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ராணுவ கூட்டமைப்பான நேட்டோ சர்வதேச விவகாரங்களில் குறிப்பாக இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக பிரகடனப்படுத்தி உள்ளது. இந்திய … Read more

நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் மத்திய அரசு கடிதம்: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து மீண்டும் விளக்கம் கேட்டு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரைவில் பதிலளிக்கப்படும்” என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்குப் பிறகு, குடியரசுத் … Read more

கோடீஸ்வரரின் மகள் 9 வயதில் துறவறம்

சூரத்: குஜராத்தில் பிரபலமான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் தானேஷ் மற்றும் அவரது மனைவி அமி சங்வி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், 9 வயது மூத்த மகள் தேவன்ஷி என்பவர் கோடிகளை துறந்து தான் விரும்பிய எளிய துறவற வாழ்க்கைக்கு மாறியுள்ளார். இவருக்கு நான்கு வயதில் தங்கை ஒருவரும் உள்ளார். இந்த நிலையில் ஆசா பாசங்களை துறந்து அவர் துறவறத்தை மேற்கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக நிர்வாகக் குழுவை பாஜக அமைத்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திருநெல்வேலி: “ஈரோடு இடைத்தேர்தல் வேலைக்காகவே 14 நிர்வாகிகள் கொண்ட குழுவை பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்” என்று அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருநெல்வேலியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தமட்டிலும், அது ஏற்கெனவே தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி. … Read more

‘பூமியில் சொர்க்கம்’ படம் வெளியிட்ட அமைச்சர்

புதுடெல்லி: முழுவதும் பனிபடர்ந்த நிலையில் மலைகளுக்கு நடுவே ரயில் செல்லும் கண்கவர் போட்டோக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இது எந்த ரயில் நிலையம் என யூகிக்கும்படி கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் முழுவதும் பனிபடர்ந்த ரயில் நிலையத்துக்குள் ரயில் செல்லும் காட்சி தெரிகிறது. இது எந்த ரயில் நிலையம் என யூகிக்கும்படி, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். ‘பூமியில் … Read more

வேங்கைவயல் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படாதது வருத்தம் அளிக்கிறது: திருமாவளவன் 

சென்னை: வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் விசிக சார்பில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” வேங்கைவயல் சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் … Read more

லக்கிம்பூர் கேரி வன்முறை வழக்கு | மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன் வழங்க உ.பி. அரசு எதிர்ப்பு

புதுடெல்லி: லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுக்கு ஜாமீன் வழங்க உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அஜய் மிஸ்ரா மகனின் ஜாமீன் மனுவினை நீதிபதிகள் சூர்யகாந்த் ஜேகே மகேஷ்வரி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் என்ன அடிப்படையில் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கேட்டனர். அதற்கு உத்தரப் பிரதேச அரசு சார்பாக ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல்,” இது மிகவும் தீங்கான, கொடுமையான குற்றமாகும். … Read more

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான முதல் இந்தியர் – பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம்

அன்னபோலிஸ்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாண ஆளுநரான இந்தியாவில் பிறந்த அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர் 7 வயதாகும்போது அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார். தற்போது 58 வயதாகும் அவர், கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் துணைநிலை ஆளுநராக … Read more

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ள மின்சார சட்டத் திருத்த விதிகள் 2022 நடைமுறைப்படுத்தப்பட்டால், மின்சாரக் கட்டணம் அதன் உற்பத்திச் செலவு மற்றும் கொள்முதல் விலைகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான … Read more

பாலியல் புகார் | 72 மணி நேரத்தில் பதிலளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பயிற்சியாளர்கள் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இது குறித்து 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்க அளிக்க வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்த விவகாரம் விளையாட்டு வீரர்களின் நலன்சார்ந்தது என்பதால், அமைச்சகம் இதனை தீவிரமான ஒன்றாக பார்க்கிறது. இந்த விவாகாரம் தொடர்பாக 72 மணி நேரத்தில் … Read more