செகந்திராபாத் ஷாப்பிங் மால் தீ விபத்து – ட்ரோன் கேமரா மூலம் 3 உடல் கண்டுபிடிப்பு

செகந்திராபாத்: செகந்திராபாத் 5 அடுக்கு கொண்ட டெக்கான் மாலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு திடீரென கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 20 மணி நேரம் கழித்துதான் தீ கட்டுக்குள் வந்தது. அதற்குள் அந்த 5 அடுக்குமாடி முழுவதும் தீயால் சேதமடைந்தது. கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதையடுத்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டுள்ளன. மேலும் கட்டிடம் எந்த … Read more

ஏப்.14-ல் அண்ணாமலை நடைபயணம் தொடக்கம் – திருச்செந்தூரில் இருந்து தொடங்க திட்டம்

விருத்தாசலம்: ஆளுநர் விவகாரத்தில் மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடலூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபயணம் தொடங்க இருப்பதாக கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் பி.செல்வம், பொருளாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். … Read more

மத்திய அரசுத் துறைகளில் பணியாற்ற நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பிரதமர் மோடி நியமன ஆணை

புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, நாடு முழுவதிலும் 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆய்வு செய்த பிரதமர் மோடி, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு … Read more

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் இந்திய மருத்துவம் – ஓமியோபதி துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 1,541 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கரோனா தொற்றின்போது, சித்தா மருத்துவப் பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. … Read more

காவல் துறை வேலைவாய்ப்புகளில் போலீஸாரின் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: தமிழக போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் மன உறுதி, விசுவாசம், நேர்மையை ஊக்கப்படுத்தும் வகையில், போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், … Read more

கோவை | 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு – இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

கோவை: கோவையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.24.70 கோடி மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தை இந்துசமய அறநிலையத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள பரமேஸ்வரன்பாளையத்தில் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயி்ல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான மொத்தம் 24.7 ஏக்கர் இடம், பரமேஸ்வரன்பாளையம் அருகேயுள்ள தேவராயபுரம் கிராமத்தில் 4 பகுதிகளாக அடுத்தடுத்துள்ளது. 4 இடங்களும் விவசாய நிலமாக இருந்தாலும், 2 இடங்கள் மட்டுமே முழு விவசாய பயன்பாட்டில் உள்ளது. … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இபிஎஸ் ஆலோசனை

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. … Read more

சென்னையில் 17 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் 17 லட்சம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை இல்லம் தேடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட இளங்கோ நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயாலிசிஸ் மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.20) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “முதல்வர் சென்னை மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராக பணியாற்றியபோது, சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டார்கள். சென்னை … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பிரிவுகளை கண்டறிவதில் சிரமப்படும் முதியோர், மாற்றுத்திறனாளிகள்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய இடமில்லாமல் கிடைக்கும் சிறிய இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் சரியான வழிகாட்டி பலகைள், வழிகாட்டிகளும் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒரே இடத்தில் இல்லாமல் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. பழைய கட்டிடம் கோரிப்பாளையத்திலும், தலைக்காயம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு அண்ணா பஸ்நிலையம் அருகேயும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மைதானத்திலும் தனித்தனியாக உள்ளன. இந்த … Read more

பழங்குடியின மக்கள் வெளியே வந்து நல்ல பண்பாட்டை வளர்த்து, தங்களை உயர்த்தி கொள்ள வேண்டும் – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பழங்குடியின மக்கள் வெளியே வந்து மற்றவர்களுடன் பழகி நல்ல பண்பாட்டை வளர்த்து தங்களை உயர்த்தி கொள்ள வேண்டுமெனபுதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி நேரு யுவகேந்திரா சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் தெய்வசிகாமணி வரவேற்றார். புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன், நேரு யுவகேந்திரா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு … Read more