தமிழகத்தில் இன்று 1,252 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 285 பேருக்கு பாதிப்பு- 4,768 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 1,252 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,41,783. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,48,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,80,049. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 81,68,040 பேர் வந்துள்ளனர். சென்னையில் 285 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை … Read more

'ஹிஜாப் தடை, குர்ஆனை தடை செய்வதற்கு சமம்' – கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள்

பெங்களூரு: “ஹிஜாப் பிரச்சினை ஏழை இஸ்லாமிய பெண்களின் மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது. ஹிஜாப்பை தடை செய்வது குர்ஆனை தடை செய்வதற்கு சமம்” என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை மூன்றாவது நாளாக இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய … Read more

உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தும் உக்ரைன் நெருக்கடி

கரோனா பெருந்தொற்றையே உலகம் மறந்துவிடக்கூடிய அளவுக்கு, ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கில் மிகப் பெரிய ராணுவ மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற புதிய பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டை அதற்குப் பக்கத்தில் உள்ள ரஷ்யா எந்த நேரமும் ஆக்கிரமிக்க முற்படலாம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், அவை இடம் பெற்றுள்ள வட அட்லான்டிக் (ராணுவ) ஒப்பந்த நாடுகள் அமைப்பும் கூறி வருகின்றன. உக்ரைன் எல்லைப்பகுதியில் கவச வாகனங்கள், டேங்குகள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்விமானங்கள் ஆகியவற்றுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,13,073 பேர் – டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (பிப்.19) நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்கவால் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவல் ஆளிநர்கள் என 1,13,073 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு வருகிற 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 31,150 வாக்குச்சாவடிகளில் ஒரே … Read more

பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார்?- ராகுல் காந்தி விளக்கம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது. பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. தற்போது … Read more

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பாலிவுட் இயக்குநர் 

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனீல் தர்ஷன் வழக்கு தொடர்ந்துள்ளார். 1996ஆம் வெளியான ‘அஜய்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுனீல் தர்ஷன். இப்படத்தைத் தொடர்ந்து ‘ஜான்வர்’, ‘ஏக் ரிஸ்டா’,‘டலாஷ்’, ‘அண்டாஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளது. இயக்கம் தவிர்த்து சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதுவே அவர் இயக்கத்தில் வெளியாக கடைசிப் படமாகும். இப்படத்தில் ஷிவ் … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நிறைவு: இறுதி நாளில் தலைவர்கள் பேச்சின் ஹைலைட்ஸ்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி நாளான இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரச்சாரம் நிறைவு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் … Read more

பஞ்சாப் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஆன்மீக மடங்கள்: டேராக்களின் தலைவர்களுடன் அமித் ஷா, சன்னி சந்திப்பு

புதுடெல்லி: பிப்ரவரி 20 இல் ஒரே கட்டமாக பஞ்சாலின் 117 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கானப் பிரச்சாரம் தீவிரம் பெற்றுள்ள நிலையில், அதில் போட்டியிடும் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் டேராக்களுக்கும் சென்று வருவது துவங்கி விட்டது. வட மாநிலங்களில் ’டேராக்கள்’ எனப்படும் ஆன்மீக மடங்கள் கொண்டது பஞ்சாப். சிறிதும், பெரிதுமாகப் பல எண்ணிக்கையில் உள்ள இந்த டேராக்களின் பக்தர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்களில் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர். எனவே, பஞ்சாப் … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள்: அல்ஜீரியா அதிபர் அறிவிப்பு

அல்ஜீரியாவில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அப்தில்மஜித் அறிவித்துள்ளார். கரோனாவுக்குப் பிறகு உலக அளவில் வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனை குறைக்க உலகத் தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், அல்ஜீரிய அதிபர் தனது நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு துணைபுரியும் வகையில் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அப்தில்மஜித் கூறும்போது, “வேலையில்லா இளைஞர்களின் கண்ணியத்தைக் காக்க மாதம்தோறும் உதவித் தொகையை வழங்க … Read more

மேற்குத் தொடர்ச்சி மலையில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இரு நாட்டு வெடிகுண்டுகள் இன்று காலை கண்டெடுக்கப்பட்டன. கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குன்னூர் பீட் பகுதியில் வனத்துறையினர் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முள்புதர் அருகே 2 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்துள்ளன. இதனைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து, கிருஷ்ணன் கோவில் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் 2 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றி, அவற்றை … Read more