3 மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவு; வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்: 58 பேர் பலி

பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 58 பேர் பலியாகினர். இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவாகியது. கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக பெய்த மழை, இந்த மூன்று மணி நேரத்தில் பெய்துவிட்டது. இந்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் … Read more

ஜல்லிக்கட்டு | "அவதூறுகளை பரப்புவது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல" – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் காட்டம்

சென்னை: “ஜல்லிக்கட்டு குறித்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி விஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது என்பது முதல்வர் பொறுப்பில் இருப்பவருக்கு அழகல்ல” என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய ஆட்சியில் கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து நீட் தேர்வு அறிமுகம், ஜல்லிக்கட்டுக்கு தடை, மீத்தேன் … Read more

'ஹிஜாப் சர்ச்சையல்ல, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கும் சதி வலை': கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

“ஹிஜாப் சர்ச்சையல்ல முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கும் சதி வலை” என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகளை அணியக்கூடாது அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் போலீஸ் பாதுகாப்புடன் க‌ல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஹிஜாபுக்கு தடை விதித்ததால் மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்தனர். இந்நிலையில், … Read more

எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா பொய் சொல்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெற்றதாக ரஷ்யா பொய் சொல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய … Read more

இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுக்க மின்இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க திட்டம்

சென்னை: இலவச, மானிய விலையில் வழங்கப்படும் மின்சாரத்தில் முறைகேடுகள் நடப்பதைத் தடுப்பதற்காக, நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க திட்டமிடப்பட்டுள்ள தாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.3,650 கோடி செலவாகிறது. இத்தொகையை மின்வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், மானிய செலவினங்களில் முறைகேடுகள் நடப்பதால், அதைத் தடுப்பதற்காக ஆதார்எண்ணை சம்பந்தப்பட்ட திட்டத்துடன் இணைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு, அறிவுறுத்தி உள்ளது. வீடுகளை … Read more

உ.பி. திருமண விழாவில் விபத்து: கிணற்றில் தவறி விழுந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் திருமண விழாவில் நடந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர். உ.பி. மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நேற்றிரவு ஒரு திருமண விழா நடந்தது. இந்விழாவில் கலந்து கொண்டவர்கள் கிணற்றின் மீதிருந்த சிமென்ட் ஸ்லாபில் நின்றிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த ஸ்பாப் உடைந்தது. அதில் நின்றிருந்தவர்கள் கிணற்றில் விழுந்தனர். இவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். முதல் தகவலை நேற்றிரவு வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம், திருமண நிகழ்ச்சியில் … Read more

தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடா அரசின் அவசரநிலை பிரகடனத்துக்கு கடும் எதிர்ப்பு

ஒட்டாவா: கட்டாய கரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் காரணமாக, கனடாவில் அவசரநிலை பிரகட னம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த மாதம் 29-ம் தேதி லாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் குவிந்து போராட்டம் நடத்தினர். … Read more

10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது: பள்ளிக்கல்வித் துறை

சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுவதாகவும், இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் பொதுத்தேர்வுக்கு கணக்கில்கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. பல்வேறு பாடங்களுக்கான கேள்வித்தாள் முன்கூட்டியே சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடை நீக்கம், வினாத்தாள் வெளியான 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை என பல்வேறு சர்ச்சைகளுடன் … Read more

திருப்பதியில் ரூ.1.50 கோடிக்கு உதயாஸ்தமன சேவை டிக்கெட்: தேவஸ்தானம் வெளியிட்ட 1 மணி நேரத்தில் ரூ.70 கோடிக்கு பக்தர்கள் முன்பதிவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வெளியிட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை பக்தர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இந்த டிக்கெட் ஆன்லைனில் வெளியான ஒரு மணி நேரத்தில் ரூ.70 கோடி வரை கட்டணம் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முதல் உதயாஸ்தமன சேவை டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார் என புதின் அறிவிப்பு: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க தீவிரம்

மாஸ்கோ: உக்ரைனில் போர்ப்பதற்றம் நிலவு வதால் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திரநாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று … Read more