கோவையில் ’மிரட்டும்’ கரூர் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
கோவை: ”கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரை தேர்தல் ஆணையம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவரும் சூழலில், கோவையின் பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். … Read more