லாலு பிரசாத் குற்றவாளி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு

ராஞ்சி: 5-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கிலும் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை … Read more

வெள்ளை மாளிகைக்கு வந்த புது விருந்தாளி

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வில்லோ என்ற பூனை புதிதாக வருகை புரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லப் பிராணிகள் மீது மிகுந்த ஆர்வ கொண்டவர். அதன் பொருட்டு வெள்ளை மாளிகைக்கு புதிய பூனை ஒன்றை வரவு செய்திருக்கிறார். வில்லோ என்ற இரண்டு வயதான கிரே கலர் நிற பூனை ஒன்று வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. இப்பூனை குறித்து ஜோ பைடனின் மனைவி ஜெல்லி பைடன், கூறும்போது, ”ஜோ பைடனின் சொந்த ஊரான பென்சில்வேனியாவில் உள்ள வில்லோ … Read more

பிப்ரவரி 15: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,39,221 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

ஹிஜாப், பாலியல் வன்கொடுமை | "முற்போக்கு சிந்தனைகளை வளர்ப்பீர்" – காங். எம்எல்ஏவுக்கு கர்நாடக அமைச்சர் அறிவுரை

பெங்களூரு: “முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுக்கு, அம்மாநில பாஜக அமைச்சர் அறிவுரை கூறியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது, “பெண்கள் ஹிஜாப் அணிவதைத் துறந்ததாலேயே இந்தியாவில் பாலியல் வன்கொடுமை விகிதம் அதிகரித்துள்ளது” எனப் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இதனைக் கண்டித்துள்ள கர்நாடக மாநில உயர்க்கல்வி அமைச்சர் சி.என்.அஷ்வந்த் நாராயண், “இதுபோன்ற மனநிலையை மாற்றிக் கொண்டு முற்போக்கான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அறிவுரை … Read more

ஆப்கனில் வறுமை, பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்: தடையை விலக்க உலக வங்கிக்கு கோரிக்கை

ஹெரத்: ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டி ருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் … Read more

திருவண்ணாமலையில் 4 நகராட்சிகளிலும் திமுக, அதிமுகவுக்கு கடும் நெருக்கடி:  ‘முடிவை’ தீர்மானிப்பது யார் யார்?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் திமுக மற்றும் அதிமுகவுக்கு பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் கடும் நெருக்கடியை கொடுக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) மற்றும் வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளிலும் திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

உங்களுக்கு முதல்வர், பிரதமர் வேண்டுமா? அல்லது இன்னொரு கிம் ஜோங் உன் வேண்டுமா? – விவசாய சங்கத் தலைவர் சாடல்

லக்கிம்பூர்: “உங்களுக்கு முதல்வர், பிரதமர் வேண்டுமா? அல்லது இன்னொரு கிம் ஜோங் உன் வேண்டுமா? என யோசித்துத் தீர்மானித்து வாக்களியுங்கள்” என உத்தரப் பிரதேச மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திக்கைத். டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் தான் இந்த திக்கைத். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2-ம் … Read more

கரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்: கனடா பிரதமர் குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு சென்றார்

ஒட்டாவா: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளை கடுமையாக்கி உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு போராட்டங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read more

பிரச்சாரக் களத்தில் ஒதுங்கும் முக்கிய நிர்வாகிகள்: கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள்

மதுரை: மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவுடனான கோஷ்டி பூசலால் ஒதுங்கி நிற்கும் மாநகர முக்கிய நிர்வாகிகள் கடைசி நேரத்தில் ஏதாவது உள்ளடி வேலைப்பார்பார்களோ என்ற கலக்கத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். மதுரை மாநகராட்சி அதிமுக மேயராக 2011-2016-ம் ஆண்டு வரை விவி.ராஜன் செல்லப்பா இருந்தபோது, மாநகர செயலாளராக இருந்த செல்லூர் கே.ராஜூ அமைச்சராகவும் இருந்தார். அதனால், மாநகர அதிமுகவில் இருவரும் இரு பெரும் கோஷ்டியாக செயல்பட்டனர். மாநகரத்தில் நடந்த மாநகராட்சி விழாவுகளுக்கு மேயர் … Read more

கர்நாடகா: ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி மாணவிகளுக்கு பல மாவட்டங்களில் அனுமதி மறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை முதல் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் ஹிஜாப் அணிந்து வந்ததன் காரணமாக மாணவிகளுக்கு வகுப்புக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஹிஜாப்பை நீக்கிய பிறகே மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். மாண்டியாவில் ரோட்ரி சோசைட்டி பள்ளியில் புர்கா அணிந்து வந்த ஆசிரியர்களும், புர்காவை … Read more