சீனாவின் தியான்வென்–-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது

பெய்ஜிங், மே.15– சீனாவின் தியான்வென்–-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த சாதனையைக் கேட்டு சீன மக்கள் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்துள்ளனர். ‘வெய்போ’ என்னும் சமூக வலைதளத்தில் இந்த சாதனை செய்தி தான் ஆக்கிரமித்து இருக்கிறது. உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வல்லரசு நாடுகள், விண்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நாடுகளின் கவனம் பின்னர் செவ்வாய் கிரகத்தின் … Read more சீனாவின் தியான்வென்–-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு

சென்னை, மே 14– தங்கம் விலை சரவனுக்கு இன்று ரூ.104 அதிகரித்து, 36,160 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்று ரூ.104 அதிகரிப்பு இந்நிலையில், … Read more தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு

நாளை முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

சென்னை, மே 15– நாளை முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தமிழக முதல்வராக பதவி ஏற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்தார். முதற்கட்டமாக ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விளைக்குறைப்பு நாளை முதல் (மே 16) நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டரின் விலை ரூ. 43 லிருந்து ரூ. 40 ஆக … Read more நாளை முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாவட்டங்களிடையே ‘இ–பதிவு’ போதும்: ‘இ–பாஸ்’ தேவையில்லை

தமிழக அரசு அறிவிப்பு சென்னை, மே 15– திருமணம், இறப்பு, நேர்முக தேர்வு உட்பட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மாவட்டங்களுக்கு இடையே செல்ல ‘இ–பதிவு’ மட்டும் போதும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 10.5.2021 காலை 4 மணி முதல் 24.5.2021 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு … Read more முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல மாவட்டங்களிடையே ‘இ–பதிவு’ போதும்: ‘இ–பாஸ்’ தேவையில்லை

72 வயது முதியவருக்கு வெவ்வேறு தடுப்பூசி டோஸ் போட்ட அலுவலர்கள்

மும்பை, மே 14– மகாராஷ்டிராவில், 72 வயது முதியவருக்கு முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில், ஜல்னா மாவட்டத்தின் பார்த்தூர் தாலுகாவில் உள்ள காந்த்வி கிராமத்தில் வசிக்கும் தத்தாத்ரயா வாக்மரே (வயது 72) என்ற முதியவருக்கு, மார்ச் 22ஆம் தேதி கிராமப்புற மருத்துவமனையில் கோவாக்சின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். இதனையடுத்து, ஏப்ரல் 30-ஆம் தேதி ஷிருஷ்டி கிராமத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் அவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு … Read more 72 வயது முதியவருக்கு வெவ்வேறு தடுப்பூசி டோஸ் போட்ட அலுவலர்கள்

இஸ்ரேல் தாக்குதல்: 116 பேர் பரிதாப பலி

இஸ்ரேல், மே 14– இஸ்ரேல், ஹமாஸ் படையினரிடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 109 பாலஸ்தீனியர்களும் 7 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில், காசா முனையை ஆட்சி செய்து வரக்கூடிய பாலஸ்தீனியர்களின் ஹமாஸ் போராளிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதி வருகிறது. இந்த ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி வான்வழி தாக்குதல் நடந்து வருகிறது. 116 பேர் உயிரிழப்பு கடந்த திங்கட்கிழமை … Read more இஸ்ரேல் தாக்குதல்: 116 பேர் பரிதாப பலி

இந்தியாவில் மாடர்னா, பைசர் தடுப்பூசிகளை அனுமதிக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை

புதுடெல்லி, மே 14– மாடர்னா, பைசர் போன்ற வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்களை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளின் இருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவிட்- – 19 தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவில் பயன்படுத்த அவசரகால அனுமதி வழங்கப்படும் என்று இந்திய அரசின் புதிய தாராளமயமாக்கல் கொள்கையின்படி சிறப்பு … Read more இந்தியாவில் மாடர்னா, பைசர் தடுப்பூசிகளை அனுமதிக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் எப்பொழுது கிடைக்கும்? நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

டெல்லி, மே 14– கொரோனா வைரஸுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்திலிருந்து சந்தையில் கிடைக்கும் என்று நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்தார். நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை கோவாக்சின், கோவிஷீல்ட் இரு தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவதாக … Read more ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவில் எப்பொழுது கிடைக்கும்? நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

இந்திய அரசு, பிரதமரை காணவில்லை: வலைத்தளத்தில் பரவும் விமர்சனங்கள்

சென்னை, மே 14– ‘இந்திய அரசை காணவில்லை’ என பிரபல அவுட்லுக் பத்திரிகை வெளியிட்ட கவர் போட்டோவும், மோடியை காணவில்லை என ராகுல்காந்தி வெளியிட்ட பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு லட்சக்கணக்கில் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இந்தச் சூழலில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்தியாவில் இந்தப் பெருந்தொற்று பரவ, பல மாநிலங்களில் தேர்தல் … Read more இந்திய அரசு, பிரதமரை காணவில்லை: வலைத்தளத்தில் பரவும் விமர்சனங்கள்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தம்

தூத்துக்குடி, மே 14– எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. அதன்பேரில், கலெக்டர் … Read more ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தம்