ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசு, கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே சாதி, மத வேறுபாடுகளை தவிர்க்க மதஅடையாள சின்னங்களுடன் கல்வி நிலையங்களுக்கு வர தடை விதித்துள்ளது. இதன்படி, கர்நாக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது .கல்லூரியின் இந்த தடைக்கு எதிராக நம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு … Read more

16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: 16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 வழக்கறிஞர்களையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களையும் நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில் பின்வரும் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கிஷோர் … Read more

தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 16/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,40,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 85,579 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,35,63,087 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,310பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து ஒருவரும் வெளி மாநிலத்தில் இருந்து ஒருவரும் வந்துள்ளனர்.   இதுவரை 34,40,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,956 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 5,374 பேர் … Read more

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

கொல்கத்தா: மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள மேற்கிந்தியதீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே புவனேஷ் குமார், … Read more

மார்ச் 7ல் பொறியியல் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா குறைந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததை அடுத்து மார்ச் 7ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மற்றும் … Read more

26 ஆண்டுகளாக பாதிரியார் செய்த தவறால் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டியுள்ளது….

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 26 ஆண்டுகளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 1995ம் ஆண்டு முதல் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பதவிவகிக்கும் அரங்கோ என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் தலையிடமான வாடிகன் அனுமதித்த சூத்திரத்தை தவறாக பயன்படுத்தியது தற்போது தெரியவந்திருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி ஞானஸ்நானம் பெற்ற ஒருவரே அனைத்து விதமான தேவ ஆசீர்வாதங்களுக்கும் தகுதியானவர் என்பதால் இது அந்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள் இடையே வருத்தத்தை அளித்துள்ளது. இதுகுறித்து அத்திருச்சபையின் … Read more

பாஜக எம்பி யின் ஆபாச பதிவு : காங்கிரஸ் பெண் நிர்வாகி புகார்

நொய்டா நடிகரும் பாஜக எம்பியுமான ரவி கிஷன் மீது காங்கிரஸ் பெண் நிர்வாகி பங்குரி பதக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ரவி கிஷன் பாஜகவின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.   அதே மாநிலத்தைச் சேர்ந்த பங்குரி பதக் காங்கிரஸ் பெண் நிர்வாகி மற்றும் நட்சத்திர பேச்சாளர் ஆவார்.   இவர் நொய்டா காவல் நிலையத்தில் ரவி கிஷன் மீது அளித்த புகார் அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பங்குரி பதக் தனது … Read more

இந்தியாவில் கடந்த இரண்டு மாதத்தில் விலைவாசி உயர்வு 6.01 சதவீதமாக அதிகரிப்பு! தேசிய புள்ளியியல் அலுவலகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த இரண்டு மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளதாகவும்,  கடந்த 2021ம் ஆண்டு  டிசம்பரில் 5.66% ஆக இருந்த சில்லறை விலைவாசி உயர்வு விகிதம், தற்போது (2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி) 6.01% ஆக அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைத்தொடர்ந்து, கடந்த இரு ஆண்டுகளாக விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரி வசூலும் முக்கிய … Read more

மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் – ஆடியோ

மாநிலங்களில் மத்திய அரசின் ஏஜெண்டுகளாக உள்ள ஆளுநர்களை வைத்து, ஆட்டம் காண்பிக்கும் மோடி அரசை விரட்டியடிக்கும் மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் முதல்வர்கள் ஒன்று திரள்கிறார்கள். இதை ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/02/Pari-cartoon-Audio-2022-02-16-at-10.21.04-AM.ogg

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு; வெளியூர்க்காரர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை  நிறைவடைந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டுகளுக்கு, பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி … Read more