ரயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 சவரன் தாலி சங்கிலி பறிக்க முயற்சி.. பைக் திருடர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில்வே ஊழியரின் மனைவியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவனை பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விராலிமலை சாலையில் மகளுடன் சென்ற ரயில்வே ஊழியர் மனைவி கோமளாவை மறித்த இருவர், கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். நடப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் கொள்ளையர்களை தப்ப விடாமல் சாலையில் ஆட்டோவை மறித்து நிறுத்தி தடுத்தார். ஒருவன் தப்பிய நிலையில் கையில் சிக்கிய விஜய் என்பவனை பொது … Read more

இலங்கையில் 2 வாரங்களுக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிகளை மூட உத்தரவு… எரிபொருள் பற்றாக்குறையால் நடவடிக்கை

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து மற்ற பொதுத் துறை ஊழியர்கள் இரண்டு வாரம் வீட்டில் இருந்து பணி புரிய அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு பொது போக்குவரத்தை முற்றிலும் நிறுத்த போக்குவரத்து கழகங்களுக்கு அரசு கட்டளையிட்டுள்ளது. மேலும் பள்ளிகளை 2 வாரம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. Source link

100 வயது தாயாரிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி

குஜராத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் , இன்று காலை காந்தி நகருக்கு சென்றார். அங்கு 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும் தமது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் குஜராத் மாநிலத்தில் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும் அவர் பூமி பூஜை நடத்துகிறார் Source link

ரூ.15.5 கோடியை பாதுகாத்தால் ரூ.4.5 கோடி கமிஷன் என மோசடி… ஏமாந்த இளைஞர்

அமெரிக்க ராணுவம் தந்த பணத்தை பினாமி போல் பாதுகாத்தால் நான்கரை கோடி ரூபாய் கமிஷன் தருவதாக கூறி தேனி இளைஞரிடம் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி லட்சுமிபுரத்தை சேர்ந்த முருகானந்தத்தை பேஸ் புக் மூலம் தொடர்பு கொண்ட எமிலி ஜோன்ஸ் என்பவர், தான் அமெரிக்க ராணுவத்தில் செவிலியராக பணியாற்றுவதாகவும், சிரியா போர் மூலம் கிடைத்த பதினைந்தரை கோடி ரூபாய் பணத்தை பாதுகாக்க நம்பிக்கையான ஆள் வேண்டும் என்றும் … Read more

செர்ரிப் பழங்களில் விஷம் கலந்து ரஷ்யர்களுக்குப் பரிசளித்த உக்ரைன் விவசாயிகள்..!

உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் உக்ரைன் Melitopol நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் விஷம் தோய்ந்த செர்ரிகளை அபகரித்துச் சென்றனர். இது ரஷ்ய வீரர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பரிசு என்று உஉக்ரைன் தெரிவித்துள்ளது. செர்ரிப் பழங்களை உண்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் மெலிட்டோபோல் நகரில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பல ஆயிரக்கணக்கான டன்கள் செர்ரிப் … Read more

டெல்லி உள்ளிட்ட 6 உயர்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல்

டெல்லி உள்ளிட்ட 6 உயர்நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகள் அடுத்து வரும் நாட்களில் பொறுப்பேற்க உள்ளனர். இதில் இருவர் தலைமை நீதிபதிகளாக பதவி உயர்வு பெறுகின்றனர் . தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு அதே தகுதியுடன் மாற்றப்படுகிறார்.டெல்லி உயர் நீதின்றத் தலைமை நீதிபதி பட்டேல் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து சில மாதங்களாக தலைமை நீதிபதி பதவி அங்கு காலியாக உள்ளது. நீதிபதிகள் தொடர்பான முறையான அறிவிக்கை சில நாட்களில் … Read more

மின் விளக்கு வசதியில்லாத பாலாற்று பாலம்… அடிக்கடி விபத்து நேரிடும் அச்சம்… வாகன ஓட்டிகள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்று பாலத்தில் மின் விளக்கு வசதி செய்து தரக் கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் வாகனங்கள் மாமண்டூர் பாலாற்று பாலத்தை கடந்து செல்லும் போது கும்மிரட்டில் பாலம் காட்சியளிப்பதால் வாகன விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. கடந்த ஆண்டு பழுதான பாலம் அண்மையில் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில், கையோடு பாலத்தில் உள்ள மின் விளக்குகளையும் சரிசெய்து தருமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source … Read more

இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழை… 20 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக தஞ்சம்

வங்காளதேசத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் 20 லட்சம் மக்கள் வீடு வாசல்களை இழந்து முகாம்வாசிகளாக மாறினர். வடகிழக்கு பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை படகுகளை கொண்டு மீட்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. உயர்நிலை மாணவர்களுக்கு நடத்தவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, பள்ளிகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். கால நிலை மாற்றமே பருவம் தவறிய மழைக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலேட் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணி, அத்தியாவசிய பொருட்கள் விநியோக பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. … Read more

பாடகர் சித்து மூசாவாலா கொலையை தாம் செய்யவில்லை.. தாம் திட்டமிட்ட போதும் தமது கூட்டாளிகள் கொன்று விட்டதாக பிஷ்னோய் வாக்குமூலம்..!

பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலாவை தாம் கொல்ல நினைத்தது உண்மைதான் என்று ரவுடி தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் ஒப்புக் கொண்டுள்ள போதும், தமது கூட்டாளிகள் சிலர் ரகசியமாகத் திட்டமிட்டு இக்கொலையை செய்ததாகக் கூறியுள்ளான். சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் பிஷ்னோயை மொஹாலிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். சித்து மூசாவாவாவின் காரைப் பின் தொடர்ந்த கொலையாளிகளின் கார்கள் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் காட்டி போலீசார் விளக்கம் கேட்டனர். பழிவாங்கும் நடவடிக்கையாக தாம் சித்துவை கொலை செய்ய … Read more

உர ஏற்றுமதி முறைகேடு தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சரின் சகோதரர் வீட்டில் சிபிஐ சோதனை.!

உர ஏற்றுமதி முறைகேடு தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சகோதரர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கெலாட் சகோதரரின் நிறுவனம் 2007 முதல் 2009 வரையான காலத்தில் மானிய விலையில் பெற்ற பொட்டாஷ் உரத்தைச் சேகரித்துத் தொழில் பயன்பாட்டுக்கான உப்பு என்ற பெயரில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக ஜோத்பூரில் உள்ள அக்கிராசன் கெலாட்டின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.   … Read more